Wednesday, August 25, 2010

காயத்திரி(காயத்ரீ)

புணர்த்திய வடிவில்:

ஓம் பூர்புவஸ்ஸுவ
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

பிரித்த வடிவில்:

ஓம் பூர் புவ(ஸ்) ஸுவ
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க தேவஸ்ய தீமஹி
திய யா ந: ப்ரசோதயாத்

ஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக!
oபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அல்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது.

oபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். ‘க’கர ஒலி வருக்கம் ‘வ’கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க.

oஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். ‘மேலிடம்’என்று பொருள்படும் ‘சுவல்-சுவர்’ எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும்.

இம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள்.

oய: = யார்
[ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே ‘ய’ என்றாயிற்று.]

oந: = நம்முடைய
[‘நம்’ என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே ‘ந’ எனத் திரிபடைந்துள்ளது.]

oதிய: அறிவைத்
[அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக ‘அறிவு’ என்ற பொருளையும் அதற்கும் மேலாக ‘ஞானம்’ என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ]

o ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ;

o தத் = அந்தச்
[‘அது’ எனப் பொருள்படும் ‘தான்’ என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் ‘தன்-தத்’ என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ]

o தேவஸ்ய = சுடருடைய
[தீய்(எரி) என்னும் பொருள்தரும் ‘தேய்’ என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ’ என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே ‘தேவ + அஸ்ய’ என்பதாகும். ]

o ஸவிது = கடவுளின்

o வரேண்யம் = மேலான
[ ‘பரம்’ எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் ‘வரம் > வரன்’ என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் ‘ன்’ என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.]

o பர்க = ஒளியைத்
[ ‘புல்’ என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து ‘பர்க்’ என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ]

o தீமஹி = தியானிப்போமாக!
[ ‘துய்’ எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், ‘திய் + ஆனம் . தியானம்’ என்னும் சொல் பிறந்துள்ளது. ‘தீமஹி’ எனும் சொல்லின் முதனிலையான ‘தீ’ என்பது துய் > திய் > தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ]

இச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே. இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே!

Monday, August 23, 2010

தமிழ்மொழியின் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : குமரிக் கண்டம் / குமரிநாடு / கடல்கொண்ட தென்னாடு
                   [ LEMURIA / GONDWANA LAND]

காலம் : கி.மு. 50 000க்கு முன்.

அமைப்பு : இயல் – இசை - நாடகம்.

வடிவம் : ஒலிவடிவம் - வரிவடிவம்.

வழக்கு : நூல்வழக்கு - உலகவழக்கு.

நிலை : 1. செந்தமிழ் (திருத்தம்) -

                 2. கொடுந்தமிழ் (திருத்தமில்லாதது)


          þÂøÒ:    ±ØòÐ - ¦º¡ø - ¦À¡Õû.
          ¿¨¼ :     ¦ºöÔû ¿¨¼ - ¯¨Ã¿¨¼.
          ¬ðº¢ :    þÄ츢Âõ – þÄ츽õ.
          
          Á¡ðº¢ :    ¾É¢òÐ þÂíÌõ §ÀáüÈø.
          ¾Ì¾¢ :     þ¼÷ ¦ÅýÚÂÕõ ÅøĨÁ.    
          þÄìÌ:     «Èõ - ¦À¡Õû – þýÀõ – Å£Î.
          ÅÇ÷ò§¾¡÷: À¡ñÊ Á¡ÁýÉ÷¸û.
          ¸Çõ  :   ãýÚ ¸¡Äì ¸ð¼ò¾¢ø «¨Áó¾ ¸Æ¸õ - ºí¸õ.
          §¾¡üÚ¿÷:  ¸¢.Ó.10 278þø - Ó¾ø ¾Á¢úô§ÀÃú÷
                 ‘ À¡ñÊÂý ¸Îí§¸¡ý’
          Ó¾ü¸Æ¸õ  : À·ÚǢ¡üÚò ¦¾ýÁШÃ.
          þ¨¼ì¸Æ¸õ: ÌÁâ¡üÚì ¸Å¡¼ÒÃõ.
          ¸¨¼ì¸Æ¸õ: ¨Å¨¸Â¡üÚ ÁШà                                 


ÀÃÅø ¿¢¨Ä

  1. ÀÆíÌÁÃ¢ì ¸ñ¼õ – ÌÁâ¿¡Î.

     2. ÌÁâ - º¢óÐ - þÁÂõ ŨÃ.
     [ 10,000 ¬ñθðÌ Óý þó¾¢Â¡ ÓØÅÐõ ´§Ã ¾¡ö¦Á¡Æ¢¾¡ý ÅÆ츢ĢÕó   ÐûÇÐ. «Ð Àø§ÅÚ ¯û¿¡ðÎò ¾¢Ã¢Ò¸Ç¡Öõ «ÂÄ¢ÉòÐò ¦¾¡¼÷ҸǡÖõ ¾¢Ã¢ÒôÀðÎ ÀÄáÚ ¦Á¡Æ¢¸Ç¡¸¢ þÕ츢ýÈÐ. ]

ÍÕí¸ø ¿¢¨Ä
          1.    ÌÁâ Ó¾ø ¸í¨¸ ŨÃ
          2.    ÌÁâ Ó¾ø Å¢ó¾¢Âõ ŨÃ
          3.    ÌÁâ Ó¾ø §Åí¸¼õ ŨÃ
          4.    ÌÁâ - §ÁüÌ Á¨Äò¦¾¡¼÷ 
§Åí¸¼õ ¬¸¢ÂÅüÚìÌû.

          þü¨È ¿¢¨Ä: i.  ¾ýɡ𺢠- ¾Á¢ú¿¡Î, ®Æõ.
                  ii. º¡÷À¡ðº¢ - Á§Äº¢Â¡, º¢í¨¸,¦Á¡Ã£º¢ÂÍ ...

          «ÊôÀ¨¼Â¡É ¦Á¡Æ¢¿¨¼ 2 :
           1.    à ¿¨¼/தன்நடை  2.   ¸Ä¨Å/கலப்பு ¿¨¼
Àñ¨¼ò ¾Á¢¦ÆØòÐ
          பட(சித்திர) எழுத்து
          «¨º¦ÂØòÐ [º¢óÐ Ó¾ø þÄí¨¸ ŨÃ]
          ¸ñ¦½ØòÐ - §¸¡¦ÄØòÐ - Åð¦¼ØòÐ.
          முதல்(À¢Ã¡Á¢) ±ØòÐ [ þÐ அசையெØò¾¢ý ¾¢Õò¾¢Â ÅÊÅõ. ¾Á¢ú, À¡Ä¢,   À¢ரா(புரா)¸¢Õ¾õ ±ýÈ ãýÚìÌõ இது ¦À¡Ð¦ÅØòÐ.]
     ¸¢Ãó¾õ – ż¦Á¡Æ¢ì¸¡¸ò ¦¾ýÉ¡ðÊø §À¡Ä¢ì¸ô¦ÀüÈ ±ØòÐ [ÀøÄÅ ±ØòÐ].
          [¸¢Ãó¾õ = Òò¾¸õ, áø, ÍÅÊ.]
 சமற்கிருதம் உள்பட இந்திய மொழிகளின் அத்தனைக்கும் தமிழ் எழுத்து அடிப்படையான ஆதி எழுத்து. 

எழுத்துக்குக் கணக்கு என்பதும் ஒரு பெயராக உள்ளது ஒலியின் ஒலிப்பு அளவு(காலம்) கணிக்கப்பட்டது கணக்கு. அக்கணகினைக் கற்பிப்பவர் அதாவது எழுத்தறிவித்துக் கல்வியை வழங்குபவர் கணக்காயர். எழுத்தால் அமைந்து அறியலாகும் இலக்கியமும் கணக்கு எனப்படும். மூன்றாம் கழ(சங்)க இலக்கியம் முழுதும் கீழ்க்கணக்கு, மேல்கணக்கு என்று கூறப்படுவதை நினைக.

¾Á¢ú ±ØòÐò Ш½ìÌȢ£θû
          1.    ¸¡ø: -          ¸¡, Á¡, »¡...
                           [ ‘¬’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
          2.    ¦¸¡õÒ측ø:-    ¦º¡, ¦Á¡, ¦¾¡...
                           [ ‘´’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
          3.    ¸£üȨÃ측ø:-    Ð, Ñ...
                           [ ‘¯’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
          4.    ¸£üÚ측ø:- à, á..........
                           [ ‘°’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
          5.    ÒûǢ측ø:- °, ¶, ¦¸ª, ¦ºª - Ç
                           [‘°-¶’¸¡Ã ¦¿Êø ÌÈ¢]
          6.    À̾¢ì¸¡üÀ¢¨È:-  â, ç, ä
                           [ ‘°’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
          7.    ¦¸¡õÒ:-         ¦É¡, §É¡, ¦È¡, §½¡
                           [ ¦ - ´ü¨È즸¡õÒ,
                             § - þÃð¨¼ì ¦¸¡õÒ]
ÌÈ¢ôÒ :    À¨Æ ±ØòРӨȢø, ½¡, ¦½¡, §½¡, É¡, ¦É¡, §É¡, ¦È¡, §È¡, ... §À¡ýÈ ±ØòиǢý À¢¨È¿¢Ä× §À¡ýÈ ¸£úŨÇ×¼ý ÜÊ ÅÊ× ¦¸¡õÒôÀ¢¨È ±ÉôÀð¼Ð.
          8.    ¸£úÅ¢ÄíÌ:-      Ì, Ý, ã, Ù, é .........
                           [ ‘ ¯ - ° ’ ì¸Ç¢ý ÌÈ¢ ]
          9.    §ÁøÅ¢ÄíÌ:-     ¸¢ - ¸£, Á¢ - Á£, ¾¢ - ¾£, 
                           [ ‘ þ - ® ’ ì¸Ç¢ý ÌÈ¢ ]
          10. ÀÎ쨸î ÍÆ¢:-     ¨¸, ¨Á, ¨Å, ¨Â, ¨Ä
                           [ ‘ ³ ’¸¡Ãì ÌÈ¢ ]
எழுத்து வகை
          Ó¾¦ÄØòÐ           = 30
          º¡÷¦ÀØòÐ      = 12 x 18  = 216    
          ¦¿Îí¸½ìÌ     = 30 + 216 + 1
          ¬ö¾õ - ·       = 1

எழுத்துத் தொகை
±ØòÐ :–   1.    ÌÚí¸½ìÌ
           2.    ¦¿Îí¸½ìÌ
¯Â¢÷ - 12 ±ØòÐ :
          «   ®   ¯   ±   -    ´  -
           ¬  þ   °  ²  ³    µ 

¦Áö – 18 ±ØòÐ
     ì í î ï ð ñ ò ó ô      
     õ ö ÷ ø ù ú û ü ý
þÉõ 3  : ÅøÄ¢Éõ   - ¸º¼ ¾ÀÈ       6
           ¦ÁøÄ¢Éõ   - ¹»½ ¿ÁÉ         6
           þ¨¼Â¢Éõ -  ÂÃÄ ÅÆÇ      6

¦Á¡Æ¢Ó¾ø ±Øòиû
          12  ¯Â¢÷¸û ÓØÐõ ÅÕõ.
     ¸-º-¾-¿-À-Á ±ýÈ 6þø ±øÄ¡ ±ØòÐõ ÅÕõ. [ ¦ºª ¾Å¢Ã ].
          ‘Å’ Å⨺¢ø ×-ç-¦Å¡-§Å¡ 4¯õ šá.
          ‘Â’ Å⨺¢ø ‘¡’ ÁðÎõ.
          ‘»’ Å⨺¢ø »-»¡-»¢-¦»-§»-¦»¡-    §»¡ ÁðÎõ.
          ¼-½-Ã-Ä-Æ-Ç-È-É ±Ûõ 8    Å⨺Ôõ šá.

¦Á¡Æ¢Â¢Ú¾¢ ±Øòиû
          12 ¯Â¢÷¸û ÓØÐõ ÅÕõ.
          ï-ñ-ó-õ-ý-ö-÷-ø-ù-ú-û ¬¸¢Â 11 ¦Áö¸û ÅÕõ.
          ì-î-ð-ò-ô-ü ±ýÈ ÅøÄ¢É ¦Áö¸Ùõ ‘í’ ±Ûõ ¦ÁøÄ¢É ¦ÁöÔõ šá.

¦Á¡Æ¢Â¢¨¼ ±Øòиû



ì-î-ò-ô ±Ûõ 4¯õ  ¾õÓ¼ý ¾¡§Á ÅÕõ.
     ±-Î:  Àì¸õ, «îÍ, ¸ð¼¨Ç, அத்தி.
÷-ú ±ýÀ¨Å ¾õÓ¼ý ¾¡õ šá.   À¢ÈÅü§È¡Î ÅÕõ.
     ±-Î:  °÷¾¢, ¬úÅ¡÷, «¾¢÷, Á¸¢ú.









Thursday, August 19, 2010

தத்துவம்

தத்துவம் எனும் சொல்லுக்கு வேர்ச்சொல் பொருள்விளக்கம்.

இது பாகான் செராய் சிவானந்த பரமகம்சர் தியான மன்றத் தலைவர்
பிரம்மசிறீ ப.சுப்பையா அடிகளார் அவர்கள்,  ஆசிரியன் இர.
திருச்செல்வத்திடம் கேட்டுக்கொண்டபடி ஆராய்ந்து அளிக்கப்பெற்ற
சொல்லாய்வு விளக்கம்.


கேட்ட நாள்: 09-02-2000

முடித்த நாள்: 15-02-2000


நூலாசிரியர்: இரத்தினர் மகன் ஆசிரியன் திருச்செல்வம்

அகரமுதலி தரும் சொற்பொருள் விளக்கம்:


தத்துவம் :

1. அதிகாரம்         2. உண்மை

3. சுபாவம்            4. தத்துவத்திரயம்

5. பலம்                 6. புத்தி

7. பூதியம்(பௌளதிகம்)    8. பூதம் ஐந்து

9. தன்மாத்திரை ஐந்து

10. கன்மேந்திரியம் ஐந்து

11. மனம், அகங்காரம், புத்தி, குணம், பிரகிருதி இவை ஐந்து.

12. பொருள்களின் குணம்

13. இயல்பான அமைப்பு

14. பரமான்மா               15. தேக பலம்

16. இந்திரிய பலம்       17. பிரமப்பொருள்

18. தத்துவநூல்             19. சத்துவம்

[மூலம்: ஆனந்த விகடன் அகராதி, ப. 1406]



தத்துவம்:

1. அதிகாரம் 2. உண்மைநிலை

3. சுபாவம் 4. தத்துவத்திரயம்

5. தேகபலம் 6. அறிவு

7. இயல்புகுணம் 8. இந்திரிய பலம்

[மூலம்: கழகத் தமிழ் அகராதி, ப. 513]



பொருள்நிலைப் பகுப்புமுறை 3

‘தத்’ எனும் ஒலிநிலையில் ஒரே சொல்போல் தெரியும்; ஆனால், அதன் கருத்து நிலையில் எடுத்து ஒப்பிடும்போது, அஃது ஒரே சொல் அன்று. மாறாக, மூன்று வெவ்வேறு கருத்துமூலங்களிலிருந்து பிறந்துள்ள மூவேறு தனித்தனிச் சொற்கள் என்னும் உண்மைவிளக்கம் கிடைக்கும்.

தத்துவம் 1: பேசுவோனின் இடநிலையைக் காட்டும் தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்றனுள் படர்க்கையில் ஒருமைநிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். தான் > தன் > தத் என்று தமிழிலிருந்து சமற்கிருத மொழியில் உருமறியுள்ளது. இது படர்க்கையொருமைச் சுட்டுப்பெயர்.

தத்துவம் 2:    உள்பொருள் – மெய்பொருள். இருத்தல் ஆகிய உளதாம்நிலை குறிக்கின்ற கருத்துள்ள சொல். பொருந்துதல் வினைக்கருத்துவழி ‘துன்’ என்ற வேர்வடிவிலிருந்து கிளர்ந்துள்ளது. துல் > துன் > தன் என்று அவ்வேர்வடிவு திரிபு கொண்டுள்ளது.

[ துன்னுதல் = பொருந்துதல். துன்னுதல்  >  தன்னுதல் = பொருந்துதல், பொருந்தியிருத்தல். தன் > தற்று > தத்து என்று திரிபு பெற்றுள்ளது.]

தத்துவம் 3: பருமை வினைக்கருத்துள்ள தது(துது) > தத்து  > தத்துவம் என்பதிலிருந்து வடிவுற்ற சொல். பருத்தல் வினைக்கருத்துவழி பெருகுதல், திரளுதல், நிரம்புதல் – நிரம்பியிருத்தல், நிறைதல், நிறைந்ததாதல், ... எனப் பொருள்விரிபு பெறும். திரட்சிக் கருத்திலிருந்து வலிமைக்கருத்தும், வல்லமைக் கருத்தும் கிளைத்து வந்துள்ளன.

[ ஒ.நோ.: அது  >  அதைத்தல், அதைப்பு, அதித்தல், அதிக்கம், அதிகம், அதிகரித்தல், அதிகரிப்பு, அதிகாரம், அதிகாரி,... அடுத்ததாக, அது > அத்து என்று விரிவுற்றுள்ளது. அதிலிருந்து அத்தன், முதலான சொற்கள் தோன்றியுள்ளன. அதே அடிப்படையிலான கருத்தமைப்பில்தான், ‘தது’ > ததைதல், ... என்றும் தது > தத்து என்றும் விரிவுற்றுள்ளது. ]


தத்துவம் 1 = அது எனும் பொருள்

‘அது’ என்னும் பொருளுள்ள ‘தான்’ என்ற சுட்டுதல் கருத்துடைய சொல் வழியாகத் தத்துவம் என்னும் சொல் சமற்கிருத நூலோரால் திரிபாக்க முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தத்துவம்(Tat-tvam) என்னும் சொல் “அது நீ” அல்லது “அது நீயே” எனப் பொருள்படும். அது தத் + த்வம் எனும் அமைப்புநிலை உடையது. அதன் வழியான மெய்யியல் தொடரியம்தான் “ தத்துவம் அஸி ” அதாவது “ அது நீ ஆகிறாய்” என்னும் மறைமுடிபு(வேதாந்த)ப் பொருண்மொழியின்கண் அமைந்திருப்பதாகும்.

ta = pronoun, base see tad. ta-tama, mfn.(superl.) that one (of many), Pan. V. 3, 93; just that, AitUp. Iii 12, 13.

tad = n. it, that, this, this world.

tad-tad = this and that.

eg. ‘yad-yat para-vasam karma tad-tad varjayet’ whatsoever action depends on another, that he should avoid.

tad-dina = that day.

tad-tva = the having of its qualities.

tad-vidya = the knowledge of that.


tad > tan

சமற்கிருதத்தில், ‘சத்’ என்னும் சொல் மெல்லினத்தில் தொடங்கும் சொற்களோடு சேரும்போது, ‘சன்’ என்று மாறுகிறது. இதே போல, ‘சித்’ > சின் என்று மாறியுள்ளது. இது சமற்கிருத ஒலிமரபு. [ காண்க: Cit > Cid > Cin. இதில் தமிழின் தொடர்பே இல்லை என்று சொல்வதானாலும்கூட, தத் > தன் என்னும் ஒலிமுறையை மறைக்க முடியாது. இது இருவழியிலிலும் நிகழும். ]

tan = in. comp. for tad.

1. tannamika = mfn. named thus.

2. tan-nasa m. = destruction of that.

3. tan-matra = a rudimentary or subtle element (5 in number, viz. sabda; sparsa; rupa; rasa; gandha; from which the 5 Maha-bhutas or grosser elements are produced, cf. RTL. p. 31 & 32).

‘tva – த்வ’ என்பது இயல்பு, தன்மை, குணம்.

‘tvam – த்வம்’ என்பது ‘நீ’ எனும் பொருளுடைய முன்னிலைச் சுட்டுச் சொல்.

இவ்விரண்டு சொல்லீறுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற அடிப்படையான பொருள்வேறுபாட்டினை முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை கொண்டபடியாக இனிக் கூறப்படும் விளக்கங்களைக் கவனிக்க வேண்டும்.

மேற்கண்ட விளக்கங்கள் சமற்கிருத ஆங்கில அகரமுதலியினின்றும் எடுக்கப்பெற்றவையாகும். இனித் தத்துவம் என்னும் சொல்லுக்குள்ள முதல்வகைப் பொருள்வரையறையை நோக்குவோம்.

தத் = அது, அந்த.

தத் + த்வம் = அதன் தன்மை, அதன் இயல்பு, குணம், அதன்கண் அடங்கியுள்ள தன்மை, அதனிடத்தே உள்ள சொந்தத்தன்மை, அதற்கேயுரிய இயல்புத்தன்மை.

‘த்வம்’ என்பது தன்மை, இயல்பு, குணம், பிற எதனோடும் கலப்பில்லாத தனித்தன்மை எனப் பொருள்படும் ஒரு சமற்கிருதச் சொற்பின்னொட்டு. [ இதைப் பற்றிய விரிவான விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் மேலைநாட்டுச் சமற்கிருதப் பேரறிஞர் மானியர் வில்லியம்சு அவர்கள் தொகுத்துள்ள சமற்கிருத ஆங்கில அகரமுதலியில் காண்க. ]

அடுத்து, ‘த்வ’ என்னும் சமற்கிருத வடிவம், தமிழில் ‘துவம்’ என்னும் வடிவில் தழுவப்பட்டுள்ளது. ‘தத்வ்’ என்பதைத் தத்துவம் என்று தமிழியல்புக்கு ஏற்பத் தமிழர் ஒலித்திரித்து எடுத்தாளுகின்றனர். மகத்துவம், சமத்துவம், பிரபுத்துவம் முதலான வடசொற்களில் இதன் பயில்வைக் காணலாம்.

தலைமைத்துவம் முதலானவை தமிழ்ச்சொல்லோடு சமற்கிருத ஈறினைப் புணர்த்தி உருவாக்கப்பட்ட இருமொழிகலப்பினால் உண்டாகியுள்ள இருபிறப்பிச் சொற்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

‘த்வ’ அல்லது ‘துவ’ என்னும் சமற்கிருதப் பின்னொட்டுக்கு வேர்மூலம் தமிழில் உள்ளது. கரு தமிழ்; உரு சமற்கிருதம். இதுபற்றி அறிய என் பகுத்தல் கருத்துவழி அமைந்துள்ள சொல் அறிவியல் 3 என்னும் நூலினுள் காண்க.

இதுவரையில், சமற்கிருத நூல்களில் பதிவாகிக் கிடக்கும் ஒரு பகுதி உண்மையை மட்டும் அறிந்தோம். இனி, மீந்துள்ள பகுதியான ஆதிமூலத்தைக் காண்போம்.

தான் – தன்

‘தான்’ என்பது அது, அவர், அவன், அவள் என்னும் நான்கு நிலைகளில் உயர்திணை, அஃறிணை என்றுள்ள இரு திணைக்கும் பொதுவான சுட்டுச்சொல் அல்லது சுட்டுப் பெயர். இந்தத் ‘தான்’ என்பதிலிருந்து உண்டானதே அது என்று பொருள்படுகின்ற சமற்கிருதத்தின் ‘தத்’ என்னும் சொல் என்பர் பாவாணர். அவர்தம் கருத்து முற்றிலும் ஏற்புடையது.

‘தான்’ என்பது முற்காலத்தில் படர்க்கையொருமைச் சுட்டுப்பெயராய் இருந்தது. பின்பு, தற்சுட்டு(தன்+சுட்டு)ப் பெயராயிற்று என்பது வடமொழி வரலாறு எனும் அவர்தம் நூலில் அவர் அளித்துள்ள ஆராய்ச்சி விளக்கமாகும்.

இக்கருத்தின் உண்மையை முதலில் ஆராய்வோம். அன்றாடப் பேச்சு வழக்கில், இந்தத் ‘தான்’ என்னும் சொல் இன்னமும் பசுமையாக உள்லது. மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள இடநிலையில் இருந்து பேசும்போது, நானும் இல்லை, நீயும் இல்லை அவர்தான் என்னும் பொருள்பட வரும் உரையாடலைக் கீழே கான்க.

உயர்திணையில்:

முதலாமவர்:  என்னப்பா, நீதான் சொன்னாயாமே?

இரண்டாமவர் : இல்லை! நான் இல்லை! தான்தான்(தாந்தான்) சொன்னது. தன்னைக் கேளுங்கள், தான் சொல்வது.

இதன் பொருள்:  தான்தான் சொன்னது = அவர்தான் சொன்னார். தன்னைக் கேளுங்கள் = அவரைக் கேளுங்கள். தான் சொல்வது = அவர் சொல்லுவார்.

அடுத்து, ஓர் இலக்கிய மேற்கோளைப் பார்ப்போம்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும் குறள்: 1094

இதன் பொருள்: நான் நோக்குகையில் என்னை நோக்காமல், நோக்காத போது, என்னை அவள் நோக்கி மெல்லச் சிரிப்பாள். இக்குறளில் வந்துள்ள தான் என்னும் சொல் அவள் என்னும் பொருளில் இருப்பதைக் காண்க.


அஃறிணையில்:


நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி

என்று தருங்கொல் என்வேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.
                                                                                                  - ஒளவையார்

இச்செய்யுளில் வந்துள்ள ‘தான்’ என்னும் சொல்லுக்கு, ‘அது’ என்ற அஃறிணைப் பொருள் வருவதைக் காண்க. எனவே, பாவாணர் கூறுகின்றபடி, ‘தான் - தன்’ என்னும் சொற்கள் படர்க்கை ஒருமை நிலையைச் சுட்டும் பாங்கினை ஐயமற உணர முடிகின்றது.

இந்தத் தான் என்பதே தன் என்றாகிச் சமற்கிருதத்துக்கு மூலமான பழந்தமிழிலிருந்து சென்றுள்ளது. தன் எனும் இந்தச் சொல் வருமொழிக்கு ஏற்ப, ‘தத்’, ‘த்ச்’, ‘தஜ்’ என்று பலவாறாகச் சமற்கிருதத்தில் பயில்கின்றது.

மேல்விளக்கத்திற்கு, அடுத்து வரும் பக்கங்களைக் காண்க. அதற்கு முன், ஓரிரு எடுத்துக்காட்டுக்களையும் இங்கேயே காண்பது தெளிவுறத் துணையாக இருக்கும்.   (தொடரும்)