ஒரு தனி மரபியல் உண்டு!
தமிழ் என்று ஓர்:-
- இனமரபு உண்டு
- மொழிமரபு உண்டு
- பண்பாட்டு மரபு உண்டு
- கலை மரபு உண்டு
- எழுத்து மரபு உண்டு
- இலக்கிய மரபு உண்டு
- இலக்கண மரபு உண்டு
- சமய மரபு உண்டு
- ஆன்மிக நெறி உண்டு
- அறிவு மரபு உண்டு
- அறிவியல் மரபு உண்டு
- நாட்டின மரபு உண்டு
- ஆண்டு (கால) மரபு உண்டு
- ...
என்று எத்தனையோ அருமைமிகுந்த வாழ்வியல் நிலைகள் உள்ளன. அவற்றை அவ்வத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் காக்கவேண்டும்; மீட்கவேண்டும்; புதுமைப்படுத்த வேண்டும். அயல் மொழியினங்களின் மேலாளுமைக்குத் தமிழ மாந்தர் ஆட்பட்டு; அடிமைப்பட்டக் காலங்களில் பல்வேறு திரிபுகளும் கோளாறுகளும் ஏற்பட்டுவிட்டன.
இதனை, நம்முள் பலரும் சரியாக உணர்ந்திருக்கவில்லை. இந்த வரலாற்று நிலைசார்ந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு; தமிழ்மக்களுக்குத் தங்கள் சொந்த இனமரபு, மொழிமரபு, வாழ்வியல் மரபுகள் மீது தப்பெண்ணமும் தாழ்வெண்ணமும் உருவாகும்படியாகச் செய்துவருகிர்றார்கள்.
No comments:
Post a Comment