அறியாமை
பெற்றதுதான்
எடுப்பு
அறியாமை பெற்றதுதான் அறிவென்பது - அதைப்
புரியாமல் வாழ்வதுதான் புதிரென்பது - தன்னை
தொடுப்பு
விழியாலே நீர்சிந்தி மனம்வாடலாம் - அந்த
நிலைகண்டும் பிறருன்னை நகையாடலாம்
அழுதாலே மனத்தூய்மை பெறும் உண்மையை
அறிந்தார்கள் அறிவார்கள் நிலைத்தன்மையை - அறி
முடிப்பு
பொருளோடு புகழ்யாவும் உனைச்சேருமா? - மனம்
பொருந்தாத வினையாவும் விரைந்தோடுமா?
அருளோடு பகையாவும் உனைநாடுமா? - வரும்
அன்பெல்லாம் பகையோடு வினைதேடுமா? - அறி
பாடலாக்கம்: தமிழிசை வித்தகர் அ.பு.திருமாலனார், (1978)
No comments:
Post a Comment