Monday, July 6, 2009

இஃதிருக்க அஃதெதற்கு?

மனம், மனது இவை தமிழ்ச்சொற்கள். மனது பேச்சுவழக்கில் மனசு என்று வழங்கும். வடமொழியில், மனசு > மனஸ் என்று திரிபுபெற்றுவிட்டது. மனஸ் என்பதிலிருந்துதான், மானஸ் > மானஸ(ம்) என்றும்; மானஸீக(ம்) என்றும் வேறு பல சொற்களை வடமொழிவாணர்கள் புனைந்து கொண்டனர். 

மனம், மனது என்பவற்றுக்குமேல், மனம்-மனது-மனத்தியம், மனத்திகம் என்பவற்றை முறையே மானஸம், மானஸீகம் என்பவற்றுக்கு ஈடாகப் பயன்படுத்தலாம். மானதம் - மானசம் - மானஸம் என மூன்று வடிவங்களில் காணப்படினும் மூன்றுக்கும் பொருள் ஒன்றுதான் . கருத்து, மனது என்பதே இவற்றின் அடிப்படைப் பொருள்விளக்கம். மானசபூசை என்பது மனப்பூசை; மானசீக குரு என்பது மனத்திக குரு.



No comments: