தமிழில்
பெயரை வை!
தமிழா...!
உயிரில் தமிழை வை;
தமிழில் உயிரை வை!
உயிர்த்தமிழில் உனக்கும்
உன்பிள்ளைக்கும் பெயரை வை!
வீட்டுக்கும் தமிழில் பெயர் வை!
உன் நிறுவனத்துக்கும்
தமிழில் பெயர் வை!
நாட்டுக்கும் நடப்புக்கும்
நல்ல தமிழையே வை!
ஏட்டுக்குள் எழுத்துக்குள்
அறிவுக்குள் புரிவுக்குள்
ஆன்மிக மெய்ப்பொருளுக்குள்
அன்னைத் தமிழில் அடைப்படை செய்!
அடுத்த தலைமுறைக்கு ஆவன செய்!
எடுத்த இனப்பிறப்பிற்கு
இயல்வன செய்!
இதனை மனத்தில் வை!
முதல் எடுத்துக்காட்டாக
உன்னைச் செய்!
உன் குடும்பத்தைச் செய்!
செந்தமிழில் திறமை செய்!
செந்தண்ணெறியில் இறைமை செய்!
செம்மொழிக்கு உலகில் உரிமை செய்!
உன்னை நீயே உணர்ந்து செய்!
ஆக்கம்:- இர. திருச்செல்வம்
No comments:
Post a Comment