Wednesday, July 17, 2013





வேறுபடும் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!
-         தாயுமானவர்


சமயங்கள் யாவும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கருத்தியல் கோணங்களைக் கொண்டிருப்பது இயல்பான ஒன்று. ஆனால், அவை அனைத்தும் மாந்தப் பண்பியலுக்கு மாறாக இருப்பதில்லை. எனவே, வெவ்வேறு கருத்துக் கோணங்களில் நெறிகாட்ட வந்தவையாக இருந்தாலும்கூட, உண்மையில் அவை மாந்தநேயத்திற்கு மாறாக இருப்பதில்லை.

அப்படி இருக்கப்பெறுகின்ற நிலைகளில் அவை புறக்கணிப்புக்கு உள்ளாகிவிடுவது மனத்தெளிவு கொண்டுள்ள எல்லாரிடத்திலும் பட்டறிவாக இருக்கின்றது. தன சமயம் என்பதற்காக அதனிடத்து எப்படியோ புல்லுருவி போலப் பாய்ந்து படரிக் கிடக்கின்ற பொல்லாங்குகளை மறைத்துத் தற்காத்துப் பேசப் புகும்போது அதன் தீமையை உலகமெல்லாம் பொதுவில் குட்டவே செய்யும். அவற்றைக் குறித்து சற்று ஆழ்ந்து ஆராயப் பகுந்தால் அந்தப் பொல்லாங்கு கூட தன்னல வெறிமிக்க மாந்தநிலைக் கோளாறாகவே அறியப்படும், தெளியப்படும்.


எல்லோரையும் எல்லாவற்றையும்
சமத்திறமாக - சமத்தரமாக
    உள்ளிட்டிருப்பது இறை!
மொழியினநாட்டுப் பற்றுகொள்!
மொழியினநாட்டு வெறி விடு!
சாதி தவிர்!
சமயம் கட!
பொதுமை பெறு!
ஆன்மம் அறி!
நேயம் புரி!
ஒருமை தெளி!
உரிமை மதி!
உன் வாழ்க்கை
தானே இறைமயம் ஆகிவரும்!


No comments: